/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'ஜல்ஜீவன்' குடிநீர் திட்ட பணி தென்னேரியில் முடக்கம்
/
'ஜல்ஜீவன்' குடிநீர் திட்ட பணி தென்னேரியில் முடக்கம்
'ஜல்ஜீவன்' குடிநீர் திட்ட பணி தென்னேரியில் முடக்கம்
'ஜல்ஜீவன்' குடிநீர் திட்ட பணி தென்னேரியில் முடக்கம்
ADDED : பிப் 21, 2024 10:13 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி ஊராட்சியில் 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த, 2020- - 21ம் ஆண்டில், 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ், 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக தென்னேரி அடுத்த, கட்டவாக்கம் அருகே ஆழ்துளை கிணறு மற்றும் மஞ்சமேடு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
மேலும், குடிநீர் வினியோகத்திற்காக பூமிக்கு அடியில் குடிநீர் குழாய் புதைக்கும் பணியும் முடிவுற்றது.
ஆனால், இத்தகைய பணிகள் அனைத்தும் முடிந்தும் இதுவரை இத்திட்டத்தின் குடிநீர் வினியோகம் துவக்கப்படவில்லை.