ADDED : ஜன 02, 2024 08:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவிந்தவாடி:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஜன., 11ம் தேதி, 13வது அனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு, வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் வெண்ணெய் சாற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாலை 3:00 மணி அளவில் வடமாலை சாற்றுதல், மாலை 4:00 மணிக்கு சறுக்குமரம் ஏறுதல். அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட வீர ஆஞ்சநேயர் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.