/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏலம் விடாததால் துருபிடித்திருக்கும் ஜீப்கள்
/
ஏலம் விடாததால் துருபிடித்திருக்கும் ஜீப்கள்
ADDED : டிச 01, 2024 12:55 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளன. வட்டார நிர்வாகம் மற்றும் கிராம ஊராட்சிகள் என, இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி இடங்கள் உள்ளன.
ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, வளர்ச்சி பணிகளை கண்காணிப்பதற்கு, தனித்தனியாக ஜீப் வழங்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஜீப்கள், 2.50 லட்சம் கி.மீ., துாரம் மற்றும், 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்படட வாகனங்களாக இருப்பதால், கழிவு நீக்கம் செய்ய ஊரக வளர்ச்சி துறை, அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு ஒன்று, மீதம் நான்கு ஒன்றியத்திற்கு தலா இரண்டு என, ஒன்பது ஜீப்கள், கடந்த ஜூலை மாதம் வழங்கப்பட்டன.
இருப்பினும், கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஜீப்கள் ஏலம் விடவில்லை. இதனால், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் துருபிடித்து வருகின்றன.
எனவே, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கழிவுநீக்கம் செய்த ஜீப்கள் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளன.