ADDED : செப் 21, 2011 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம் : பல்லாவரத்தில், சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி, மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.பல்லாவரம், ஆடுதொட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.
இவரது மனைவி வள்ளியம்மாள், 52; காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கடையில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.வீட்டிற்கு அருகே வந்த போது, சாலையோர மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து, வள்ளியம்மாள் மீது விழுந்தது. இதில், உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.