ADDED : அக் 22, 2024 07:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், காஞ்சிபுரம் மண்டல அளவில், கல்லுாரி மாணவர்களுக்கான கபடி போட்டி, காஞ்சிபுரம்அடுத்த, ஊவேரி பி.டி.லீபொறியியல் கல்லுாரி விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில், 13 கல்லுாரிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில், கீழம்பியில் உள்ள திருமலை பொறியியல் கல்லுாரி மாணவர்கள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். இக்கல்லுாரி கபடி விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சாம்பியன் பட்டம் வென்ற கபடி அணியினரை கல்லுாரி முதல்வர் வ.விஜயபாஸ்கர்,உடற்கல்வி இயக்குனர் சி.செல்வராஜ் உட்பட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.