/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கைலாசநாதர் கோவில் தெப்பக்குளம் கோரைப்புல் வளர்ந்து வீணாகும் அவலம்
/
கைலாசநாதர் கோவில் தெப்பக்குளம் கோரைப்புல் வளர்ந்து வீணாகும் அவலம்
கைலாசநாதர் கோவில் தெப்பக்குளம் கோரைப்புல் வளர்ந்து வீணாகும் அவலம்
கைலாசநாதர் கோவில் தெப்பக்குளம் கோரைப்புல் வளர்ந்து வீணாகும் அவலம்
ADDED : ஜூலை 14, 2025 11:43 PM

அய்யங்கார்குளம்,
காஞ்சிபுரம் அய்யங்கார்குளம் கிராமத்தில், 23 லட்சம் ரூபாய் செலவில் துார்வாரி சீரமைக்கப்பட்ட கைலாசநாதர் கோவில் தெப்பக்குளம் கோரைப்புல் வளர்ந்துள்ளதால் வீணாகி வருகிறது.
காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில் பழமையான கைலாசநாதர் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள இக்கோவில் அருகில் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், சீரழிந்த நிலையில் இருந்த இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, 2022ல், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 23 லட்சம் ரூபாய் செலவில் குளம் முழுதும் துார்வாரப்பட்டு, குளத்திற்கு செல்ல படிகள் அமைக்கப்பட்டு குளக்கரை பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கோவில் நிர்வாகம் குளத்தை முறையாக பராமரிக்காமல், குளத்தில் கோரை புற்கள் முளைத்தும், பாசி படர்ந்தும், குளத்து நீர் மாசடைந்து வருகிறது.
இதே நிலை நீடித்தால், குளத்தில் நீர்பிடிப்பு பகுதி முழுதும் கோரைப்புல் காடுபோல வளரும் சூழல் உள்ளது.
லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட குளம், இரண்டரை ஆண்டிலேயே, புற்களால் சீரழிந்து வருகிறது.
எனவே, கைலாசநாதர் கோவில் தெப்பக்குளத்தில் வளர்ந்துள்ள புற்களை அகற்ற, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.