/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேல்பாக்கம் தொடக்க பள்ளிக்கு காமராஜர் வளர்ச்சி நாள் விருது
/
மேல்பாக்கம் தொடக்க பள்ளிக்கு காமராஜர் வளர்ச்சி நாள் விருது
மேல்பாக்கம் தொடக்க பள்ளிக்கு காமராஜர் வளர்ச்சி நாள் விருது
மேல்பாக்கம் தொடக்க பள்ளிக்கு காமராஜர் வளர்ச்சி நாள் விருது
ADDED : ஏப் 03, 2025 06:56 PM
உத்திரமேரூர்,:முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15, தமிழகம் முழுதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, விருது மற்றும் நிதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில், காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அதில், கற்றல் கற்பித்தல், சுகாதாரம், பசுமை தோட்டம் அமைத்தல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மேல்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளிக்கு, 2024 -- 25ம் நிதி ஆண்டின், கல்வி வளர்ச்சி நாள் விருது வழங்கப்பட்டது. மேலும், விருதுடன் 25,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.