/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;மின்மோட்டார் பழுது சீரமைக்கப்படுமா?
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;மின்மோட்டார் பழுது சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;மின்மோட்டார் பழுது சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;மின்மோட்டார் பழுது சீரமைக்கப்படுமா?
ADDED : மே 09, 2024 12:17 AM

மின்மோட்டார் பழுது சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்ஒட்டிவாக்கம் காலனியில், 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு வீட்டு இணைப்பு குழாயில், மூன்று மாதமாக குடிநீர் வரவில்லை.
மேலும், இப்பகுதிவாசிகள் கூடுதல் குடிநீர் தேவைக்காக இரு இடங்களில் ஆழ்துளை குழாயுடன் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியின் மின்மோட்டாரும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
இதில், ஒரு குடிநீர் தொட்டி மூன்று ஆண்டுகளுக்கு முன் மாயமானது. பழுதடைந்த இரு மின்மோட்டார்களை சீரமைக்கவும் மாயமான குடிநீர் தொட்டிக்கு மாற்றாக புதிய குடிநீர் தொட்டி அமைக்கவும், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முத்துகுமார், காஞ்சிபுரம்.