sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிக்கும் ஒடிசாவுக்கும் வரலாற்று தொடர்புண்டு * மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு

/

காஞ்சிக்கும் ஒடிசாவுக்கும் வரலாற்று தொடர்புண்டு * மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு

காஞ்சிக்கும் ஒடிசாவுக்கும் வரலாற்று தொடர்புண்டு * மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு

காஞ்சிக்கும் ஒடிசாவுக்கும் வரலாற்று தொடர்புண்டு * மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு


ADDED : நவ 29, 2024 12:08 AM

Google News

ADDED : நவ 29, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: ''காஞ்சிபுரத்திற்கும், ஒடிசாவுக்கு வரலாற்று ரீதியிலான தொடர்புகள் உள்ளன,'' என, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்திற்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வருகை தந்தார். காஞ்சி காமாட்சியம்மன் கோவில் சென்று வழிபட்டார். சங்கர மடம் சென்று, அங்கு, அங்கு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தை வணங்கினார். பின், ஏனாத்துாரில் உள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா நிகர்நிலை பல்கலைக்கு சென்றார்.

பல்கலையின் உள்ளே அமைந்துள்ள ஓலைச்சுவடி பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தையும், அங்குள்ள சிற்ப சாஸ்திர சிலைகளையும் அவர் பார்வையிட்டார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:திர பிரதான் சென்றார்.

பல்கலையில், ஆதிசங்கரரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

பல்கலையில் நடந்த கருத்தரங்கில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

காஞ்சிபுரத்திற்கும், ஒடிசாவுக்கும் வரலாற்று ரீதியில் தொடர்புகள் இருந்துள்ளன. பழமையான மிகப்பெரிய பல்கலை காஞ்சிபுரத்தில் இருந்துள்ளது. அப்போதே, கலாசாரமும், தொழில்நுட்பமும் சிறந்து விளங்கியது. அவற்றை, ஒன்று சேர கற்பிக்கும் பல்கலை இங்கு தற்போது இருப்பது மகிழ்ச்சி.

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 30 ஆண்டுகளுக்கு முன், எதிர்கால தொழில்நுட்பம், கல்வி, பண்பாடு ரீதியிலான தேவை அறிந்து, இப்பல்கலையில் உருவாகியுள்ளார். பொதுவாக மேற்கத்திய நாடுகளில் இருந்து தான் புதிய கண்டுபிடிப்புகள் வந்தது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், நம் நாட்டிலேயே பழங்காலத்தில் இரும்பு, துத்தநாகம், செம்பு போன்ற பொருட்களால் அணிகலன்கள் செய்யப்பட்டுளளன.

தமிழ் உள்ளிட்ட பல மொழில்களில் இருந்து சமஸ்கிருத மொழியை எழுதுவதற்கு, கிரந்தம் எனும் புதிய எழுத்து முறை உள்ளது. அதை இன்று தான் நான் தெரிந்து கொண்டேன். அறிவியல் ரீதியிலான சிந்தனை இன்றி, இவை எல்லாம் நடைபெற்றிருக்க முடியாது.

ஆதிசங்கரர் வழியில் வந்த இப்பல்கலை., பொருளாதார நோக்கம் இன்றி, சிறந்த கல்வி வழங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில், பல்கலை வேந்தர் குடும்பசாஸ்திரி, துணைவேந்தர் ஸ்ரீநிவாசு, உதவி பேராசிரியர் தேவஜ்யோதி ஜெனா, பல்கலை நிர்வாக உறுப்பினர்கள் பம்மல் விஸ்வநாதன், செல்லா விஸ்வநாத சாஸ்திரி மற்றும் சங்கர மட நிர்வாகிகள், மாணர்வர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி இல்ல திருமணம் விழாவில், தமிழக கவர்னர் ரவி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us