/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநில அளவிலான ‛'கிக் பாக்சிங்' போட்டி: காஞ்சி வீராங்கனையருக்கு 4 பதக்கம்
/
மாநில அளவிலான ‛'கிக் பாக்சிங்' போட்டி: காஞ்சி வீராங்கனையருக்கு 4 பதக்கம்
மாநில அளவிலான ‛'கிக் பாக்சிங்' போட்டி: காஞ்சி வீராங்கனையருக்கு 4 பதக்கம்
மாநில அளவிலான ‛'கிக் பாக்சிங்' போட்டி: காஞ்சி வீராங்கனையருக்கு 4 பதக்கம்
ADDED : டிச 30, 2025 06:03 AM

காஞ்சிபுரம்: வேலுாரில் நடந்த மாநில அளவிலான 'கிக் பாக்சிங்' போட்டியில் காஞ்சிபுரம் வீராங்கனையர் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரு வெண்கலம் என, நான்கு பதக்கங்கள் வென்றுள்ளனர்.
தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில், மாநில அளவில், பெண்களுக்கான 'கிக் பாக்சிங்' போட்டி, வேலுாரில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், திருச்சி, சிவகங்கை, கோவை, மதுரை, சென்னை, வேலுார், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200 வீராங் கனையர் பங்கேற்றனர்.
இதில், 10 - 15 வயது வரையிலான கேடட்ஸ் பிரிவினருக்கு, பாயின்ட் பைட்டிங், லைட் கான்டக்ட் என, இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் காஞ்சிபுரம் மாவட்ட'கிக்பாக்சிங்' அசோசியேஷன் சார்பில், ஒன்மேன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த நான்கு வீராங்கனையர் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இதில், வீராங்கனை ஆராதனா தங்கப்பதக்கமும், மகாலட்சுமி வெள்ளிப்பதக்கமும், தியா, வேல்விழி ஆகியோர் வெண்கலப்பதக்கம் என, நான்கு பதக்கங்களை வென்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆராதனா, 2026ம் ஆண்டு மார்ச் மாதம், பெங்களூரில் நடைபெறும் தெற்கு மண்டல போட்டியில் பங்கேற்க உள்ளார் என, ஒன்மேன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் ஹரீஷ், பயிற்சியாளர் கணேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

