/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி புகார் பெட்டி : சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிகற்களால் விபத்து அபாயம்

ADDED : ஜூன் 24, 2025 12:35 AM

சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகரில் இருந்து, தேனம்பாக்கம், ஓரிக்கை வழியாக, செவிலிமேடு செல்லும் மிலிட்டரி சாலை உள்ளது. இச்சாலை புறவழி சாலையாக இருப்பதால், இச்சாலையில் அதிகளவு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், இச்சாலை வழியாக கட்டுமான பணிக்காக அதிகளவு ஜல்லி ஏற்றிச் செல்லும் லாரிகளில் இருந்து சிதறும் ஜல்லிகற்கள் ஆதிசங்கரர் நகர் சாலை வளைவில் சிதறி கிடக்கிறது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை வளைவில் திரும்பும்போது, ஜல்லிகற்களால் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, மிலிட்டரி சாலை, ஆதிசங்கரர் நகர் அருகில், சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.ரஜினிகாந்த்,
காஞ்சிபுரம்.