/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி புகார் பெட்டி: காஞ்சி பஸ் நிலையத்தில் சாலை சீரமைக்கப்படுமா?
/
காஞ்சி புகார் பெட்டி: காஞ்சி பஸ் நிலையத்தில் சாலை சீரமைக்கப்படுமா?
காஞ்சி புகார் பெட்டி: காஞ்சி பஸ் நிலையத்தில் சாலை சீரமைக்கப்படுமா?
காஞ்சி புகார் பெட்டி: காஞ்சி பஸ் நிலையத்தில் சாலை சீரமைக்கப்படுமா?
ADDED : ஆக 19, 2025 12:31 AM

கா ஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தடம் எண்: 76பி மற்றும் 79 அரசு பேருந்துகளுக்கான டைம் கீப்பர் அலுவலகம் அருகிலும், வேலுார், ஆற்காடு செல்லும் பேருந்து நிற்கும் இடத்தின் அருகிலும், நான்கு இடங்களில், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், பேருந்தில் ஏற செல்லும் பயணியர், பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர். அதேபோல, இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலைய சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.மாதவன், காஞ்சிபுரம்.