ADDED : அக் 27, 2025 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயணியர் நிழற்குடையில் இருக்கைகள் சீரமைக்கப்படுமா? கா ஞ்சிபுரம் ரயில்வே சாலை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், 2018 - 19ம் ஆண்டு, ஒதுக்கீடு செய்த நிதியில் இருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைக்கு வருவோர் மற்றும் சுற்றி யுள்ள பகுதியில் வசிப்போரும் பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நிழற்குடையில் உள்ள இருக்கைகள் உடைந்த நிலையில் உள்ளன.
இதனால், பயணியர் இருக்கையில் அமர முடியாத நிலை உள்ளது. எனவே, உடைந்த நிலையில் உள்ள இருக்கையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.தாமோதரன், காஞ்சிபுரம்.

