காஞ்சி புகார் பெட்டி: சிதிலமடைந்த மின்கம்பம் மாற்ற வேண்டும்
காஞ்சி புகார் பெட்டி: சிதிலமடைந்த மின்கம்பம் மாற்ற வேண்டும்
UPDATED : ஏப் 29, 2026 09:31 PM
ADDED : ஏப் 29, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
வாலாஜாபாத் ஒன்றியம், காரை ஊராட்சி பிரதான சாலையில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு மின்கம்பத்தில் மேல்பாகத்தில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது மினகம்பம் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, கான்கிரீட் பெயர்ந்து உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.விக்னேஷ்,
வாலாஜாபாத்.
