தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/புகார் பெட்டி: காஞ்சிபுரம் மாவட்டம்

புகார் பெட்டி: காஞ்சிபுரம் மாவட்டம்

புகார் பெட்டி: காஞ்சிபுரம் மாவட்டம்


UPDATED : செப் 28, 2026 11:08 PM

ADDED : செப் 28, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 11:08 PM ADDED : செப் 28, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாதாள சாக்கடை பணியால்

சேதமடைந்த சாலை

காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு பிராமணர் தெருவில், புதிய பாதாள சாக்கடை திட்ட பணிக்காக, இரு மாதங்களுக்கு முன், சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் தொட்டி அமைக்கப்பட்டது.

இப்பணி முடிந்ததும் பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் ‛கான்கிரீட்' கலவை மூலம் சாலையை சீரமைக்கவில்லை. இதனால், நேற்று முன்தினம் பெய்த லேசான மழைக்கே சாலை சகதியாக மாறிவிட்டது.

இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் திருக்காலிமேடு பிராமணர் தெருவில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக சேதமான சாலையை கான்கிரீட் கலவை மூலம் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.லோகநாதன்,

காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us