தெருவை மறித்து நிற்கும் மாடுகள்:விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
தெருவை மறித்து நிற்கும் மாடுகள்:விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 16, 2026 05:31 PM

தெருவை மறித்து நிற்கும் மாடுகள்
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை தெரு, சாத்தான்குட்டை தெரு, வெள்ளகுளம் தெரு, சந்தவெளி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மாடுகள் வளர்ப்போர், தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டு விடுகின்றனர்.
இந்த மாடுகள் சாத்தான்குட்டை தெரு, சாலை தெரு, வெள்ளகுளம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உணவுக்காக சுற்றித் திரிகின்றன. சாலையை மறித்து நிற்பதோடு, குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மாடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், பாதசாரிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், காஞ்சிபுரம் சாத்தான்குட்டை தெரு மற்றும் சுற்றியுள்ள தெருக்களில், காலை மற்றும் மாலை நேரங்களில் ஆய்வு செய்து, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து தொழுவத்தில் கட்டி வைப்பதோடு, மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
– சி.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.
