/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் ஜெயந்தி விழா ரூ.ஒரு கோடியில் தெய்வத்தமிழ் ஆய்விருக்கை துவக்கம்

ADDED : ஆக 13, 2025 01:46 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்த தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு நிறைவு விழாவில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், தெய்வத்தமிழ் ஆய்விருக்கை துவக்க விழா நேற்றுமுன்தினம் நடந்தது.
இதில், ஆந்திர மாநிலம், திருப்பதியில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ள காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்று ஆசியுரை வழங்கினார்.
சங்கரா கல்லுாரி தலைவர் சேது ராமச்சந்திரன் துவக்க உரையாற்றினார். சங்கரா கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
பல்வேறு நாடுகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் தெய்வத்தமிழ் குறித்து எழுதி, வாசிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆய்வு கோவை நுால் தொகுப்பை வெளியிடப்பட்டது.
பின், தெய்வத்தமிழ் ஆய்விருக்கை பெயர் பலகையையும், காஞ்சியில் உள்ள 50 கோவில்களின் வரலாறு குறித்த நுால்களையும், இலங்கை கம்பவாரிதி ஜெயராஜ், ஆடிட்டர் குருமூர்த்தி, சாஸ்தரா பல்கலை இயக்குநரும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைருமான சுதா சேஷய்யன் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர்.
சங்கரா கல்லுாரி தேசிய மாணவர் படை அலுவலர் தெய்வசிகாமணி விழாவை தொகுத்து வழங்கினார்.
விழாவில், தமிழ் துறை தலைவர் ராதாகிருஷ்ணன், சங்கரமடம் மேலாளர் சுந்தரேச அய்யர், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.