/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கர மட வரவேற்பு குழுவினருக்கு காஞ்சி மடாதிபதிகள் அருளாசி
/
சங்கர மட வரவேற்பு குழுவினருக்கு காஞ்சி மடாதிபதிகள் அருளாசி
சங்கர மட வரவேற்பு குழுவினருக்கு காஞ்சி மடாதிபதிகள் அருளாசி
சங்கர மட வரவேற்பு குழுவினருக்கு காஞ்சி மடாதிபதிகள் அருளாசி
ADDED : மே 04, 2025 01:10 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கரமடத்தின் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 1ம் தேதி காமாட்சியம்மன் கோவிலில் இருந்து, தேனம்பாக்கம் சிவாஸ்தானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு பட்டினபிரவேசம் மேற்கொண்டார்.
அன்று இரவு, சிவாஸ்தானத்தில் தங்கிய சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று முன்தினம் அதிகாலை தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் சங்கரமடம் வந்தடைந்தார்.
சங்கரமடத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி உத்சவத்தையொட்டி, மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தவானத்தில், மடாதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்திரசேகரேந்திர சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தனர்.
இந்நிலையில், காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்பு குழு ஒருங்கிணைப்பாளர் காஞ்சி வி.ஜீவானந்தம் தலைமையில், குழு ஆலோசகர்களான குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் தலைமை அர்ச்சகர் காமேஸ்வர குருக்கள், தமிழகம் இலவச பயிற்சி மைய நிறுவனர் எழிலன்.
பாண்டுரங்க குருசாமி மற்றும் ஆறுமுகம் உள்ளிட்டோர் குழுவினர், நேற்று காலை குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து, சங்கர மடத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.
பின், சங்கர மடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரிடம், மலர் மாலைகளையும், மலர் கிரீடத்தையும், வஸ்திரங்களையும் வழங்கினர்.
அதை தொடர்ந்து, இரு மடாதிபதிகளும், காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்பு குழுவினருக்கு அருளாசி வழங்கினர்.
இந்நிகழ்வில் சோழன் பள்ளி தாளாளர் முனைவர் சஞ்சீவி ஜெயராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.