/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தக திருவிழா ஆன்மிக புத்தகங்கள் வாங்க காஞ்சி வாசகர்கள் ஆர்வம்
/
புத்தக திருவிழா ஆன்மிக புத்தகங்கள் வாங்க காஞ்சி வாசகர்கள் ஆர்வம்
புத்தக திருவிழா ஆன்மிக புத்தகங்கள் வாங்க காஞ்சி வாசகர்கள் ஆர்வம்
புத்தக திருவிழா ஆன்மிக புத்தகங்கள் வாங்க காஞ்சி வாசகர்கள் ஆர்வம்
ADDED : பிப் 03, 2025 02:01 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட புத்தக திருவிழா, கடந்த மாதம் 31ல், கலெக்டர் வளாக மைதானத்தில் துவங்கியது. ஏராளமான புத்தக அரங்குகளில், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. வரும் 10ம் தேதி வரை நடைபெறும் புத்தக திருவிழாவில் எழுத்தாளர்களின் சொற்பொழிவு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
புத்தக திருவிழாவில் இரண்டாம் நாளான நேற்று, ஈரோடு மகேஷ் மற்றும் குழுவினரின் 'வாழ்வெனும் வானவில்' என்ற தலைப்பில், 'கலக்கப் போவது யாரு' குழுவினர் கலை நிகழ்ச்சி நடந்தது.
மூன்றாம் நாளான இன்று ‛மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற தலைப்பில் சுகி சிவமும், 'கற்றது கையளவு' என்ற தலைப்பில், புலவர் ராமலிங்கம் சொற்பொழிவாற்றுகின்றனர்.
புத்தக திருவிழாவில் மழலையர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் என, அனைவருக்கும் தேவையான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில், ஸ்டால் எண்: 34ல், கோவில் கோபுரம் போல, புத்தக விற்பனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சைவமும் தமிழும், சமரச சன்மார்க்க நெறியில் தாயுமானவரும், வள்ளலாரும், வடநாட்டு திருப்பதிகள், ஏகாம்பரநாதர் கோவில் வரலாறு, தெய்வத்திருமால் புராணம், பாம்பன் சுவாமிகள் வரலாறு, வைணவமும் தமிழும் என, பல்வேறு ஆன்மிக சம்பந்தமான புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
ஆன்மிக அன்பர்கள், தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். மேலும், புத்தக திருவிழாவிற்கு வருவோருக்கு, ஹிந்து அறநிலையத்துறை சார்பில், தொடந்து பொங்கல், புளியோதரை, சாம்பார் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று வழக்கறுத்தீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.