/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாயமான ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் கொலை
/
மாயமான ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் கொலை
ADDED : அக் 09, 2011 12:24 AM
ஆலந்தூர் : கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாயமான ஆட்டோ டிரைவர், மீனம்பாக்கம் குப்பை கிடங்கு அருகே, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: நங்கநல்லூர், கே.கே.நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் கார்த்திக், 28; ஆட்டோ டிரைவர். கடந்த நான்கு நாட்களுக்கு முன், வீட்டிலிருந்து வெளியே சென்ற கார்த்திக், பின், வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட, பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், பெற்றோர், பழவந்தாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். போலீசார், கார்த்திக்கை தேடி வந்த நிலையில், மீனம்பாக்கம், பக்தவச்சலம் நகர் குப்பை கிடங்கு அருகே, அழுகிய நிலையில், ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், அங்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அழுகிய சடலம் கார்த்திக் தான் என்பது தெரிந்தது. அவர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது, விசாரணையில் தெரிந்தது. அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து, பழவந்தாங்கல் போலீசார்விசாரிக்கின்றனர்.

