/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
6 மாதங்களில் சேதமடைந்த காஞ்சிபுரம் பஸ் நிலைய சாலை
/
6 மாதங்களில் சேதமடைந்த காஞ்சிபுரம் பஸ் நிலைய சாலை
ADDED : அக் 22, 2025 11:17 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலைய சாலை, சீரமைத்த ஆறு மாதத்திலேயே சேதமடைந்துள்ளது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், அன்றாடம் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. பல்வேறு ஊர்களுக்கு சென்று வர, இப்பேருந்து நிலையத்தை அன்றாடம் ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்துகின்றனர்.
மேலும், போக்குவரத்து துறை ஊழியர்கள், வியாபாரிகள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எப்போதும் பேருந்து நிலைய வளாகத்திற்குள் இருந்தபடியே உள்ளனர்.
இவ்வாறு, பலர் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தின் நிலைமை படுமோசமாக உள்ளது.
கட்டண கழிப்பறைகள் பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுவதும், மழைநீர் கால்வாய்கள் உடைந்தும் இருக்கின்றன.
சாலை பல இடங்களில் சேதமடைந்து, பெரிய அளவிலான பள்ளங்களுடன் மழைநீர் தேங்கி நிற்கின்றன. பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கொசுத்தொல்லையும் அதிகம் உள்ளது.
கடைகள் ஆக்கிரமிப்பு, சுகாதாரமற்ற இருக்கைகள் என, படுமோசமாக இருக்கிறது. மாநகராட்சி நிர்வாகம், 80 லட்சம் ரூபாய் மதிப்பில், இந்த பேருந்து நிலையத்தை ஆறு மாதங்களுக்கு முன் சீரமைத்தனர்.
ஆனால், பேருந்து நிலையத்தில் உள்ள சாலை பள்ளங்களையும், மழைநீர் கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.