/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையோர சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் வேண்டும்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையோர சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் வேண்டும்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையோர சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் வேண்டும்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையோர சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் வேண்டும்
ADDED : அக் 02, 2024 11:37 PM

சாலையோர சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் வேண்டும்
காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திக்குன்றம் பிரதான சாலையின குறுக்கே மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாமல், பள்ளம் உள்ள பகுதியில் செடி, கொடிகள் முளைத்து உள்ளன.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, தடுப்புச்சுவர் இல்லாத பகுதியில் நிலை தடுமாறி, கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில் சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.அரிகிருஷ்ணன்,
காஞ்சிபுரம்.
உடைந்த குடிநீர் தொட்டி
மாற்றப்படுமா?
காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சி, காந்தி தெருவில், அங்கன்வாடி மையம் அருகில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், 10 ஆண்டுளுக்கு முன் சிறுமின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டத. இத்தெருவாசிகளும், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், தலைச்சுமை, தள்ளுவண்டி வியாபாரிகள் குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டியில் உடைப்பு ஏற்பட்டது. ஊராட்சி நிர்வாகம் பழைய தொட்டிக்கு மாற்றாக புதிய தொட்டி அமைக்கவில்லை.
இதனால், கூடுதல் குடிநீர் தேவைக்கு வேறு பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, புதிய குடிநீர் தொட்டி அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.குமார்,
களக்காட்டூர்.