/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; நிழற்குடையை மறித்து பேனர் காஞ்சியில் பயணியர் அவதி

ADDED : நவ 07, 2024 12:32 AM

நிழற்குடையை மறித்து பேனர் காஞ்சியில் பயணியர் அவதி
காஞ்சிபுரம் காமராஜர் வீதியில், தாலுகா அலுவலகம் பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை உள்ளது. நிழற்குடைக்கு பயணியர் செல்லும் பாதையை மறித்து பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பேனரை தாங்கிப்பிடிக்கும் சவுக்கு கம்புகள் இடையூறாக உள்ளதால், பயணியரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
முக்கிய சாலை சந்திப்பில் வைத்துள்ள ‛பிளக்ஸ் பேனரால்', வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, தாலுகா அலுவகம் எதிரில், பயணியருக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகளை திசை திருப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரை அகற்ற வேண்டும்.
கே.செல்வம்,
காஞ்சிபுரம்.