/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மாம்பாக்கத்தில் தடுப்புகளின்றி குழாய் பதிக்கும் பணி

ADDED : ஆக 28, 2024 10:46 PM

மாம்பாக்கத்தில் தடுப்புகளின்றி குழாய் பதிக்கும் பணி
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஆறுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாம்பாக்கம் பகுதியில் கண்ணாடி தொழிற்சாலை எதிரே 5 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, ராட்சத அளவில் சிமென்ட் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், போதிய தடுப்புகளும், எச்சரிக்கை பதாகைகளும் இல்லாமல் பணிகள் நடக்கின்றன.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, அப்பகுதியில் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
- எம். பாஸ்கரன்,
மாம்பாக்கம்.