/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஜல்லி கற்கள் பெயர்ந்த திருமுக்கூடல் பாலம் சாலை

ADDED : அக் 13, 2024 12:47 AM

ஜல்லி கற்கள் பெயர்ந்த திருமுக்கூடல் பாலம் சாலை
உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் இயங்கும் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து, திருமுக்கூடல் பாலம் வழியாக பல பகுதிகளுக்கு லோடு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இச்சாலையில், பினாயூர் மலை வழியாக திருமுக்கூடல் பாலாற்று பாலத்திற்கு செல்லும் துவக்க பகுதி சாலை மிகவும் குண்டும், குழியுமாகி பழுதடைந்து உள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ - மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர்.
எனவே, திருமுக்கூடல் பாலம் சாலை துவக்கப் பகுதியை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி. தயானந்தம்,
அருங்குன்றம்.