/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்;புகார் பெட்டி; குடிநீர் தொட்டி அருகில் இடையூறு கான்கிரீட் தடுப்பு அகற்றப்படுமா?

ADDED : அக் 15, 2025 11:59 PM

குடிநீர் தொட்டி அருகில் இடையூறு கான்கிரீட் தடுப்பு அகற்றப்படுமா?
காஞ்சிபுரம் சுண்ணாம்புகார தெருவில், அப்பகுதி மக்களின் கூடுதல் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்துளை குழாய் வசதியுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக தேவைக்கு அப்பகுதி மக்கள் குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குடிநீர் தொட்டி அருகில் கான்கிரீட் தடுப்பு, கட்டட கழிவுகள் உள்ளிட்டவை போடப்பட்டுள்ளன. அதனால், குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க வருவோருக்கு இடையூறாக உள்ளது.
எனவே, குடிநீர் தொட்டி அருகில் இடையூறாக போடப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்பு, கட்டட கழிவுகள் உள்ளிட்டவை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.ஜெய்கணேஷ், காஞ்சிபுரம்.