/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் அடைப்பு: சாலையில் குளம்போல தேங்கும் கழிவுநீர்
/
கால்வாயில் அடைப்பு: சாலையில் குளம்போல தேங்கும் கழிவுநீர்
கால்வாயில் அடைப்பு: சாலையில் குளம்போல தேங்கும் கழிவுநீர்
கால்வாயில் அடைப்பு: சாலையில் குளம்போல தேங்கும் கழிவுநீர்
ADDED : அக் 15, 2025 11:56 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தும்ப வனம் அருணாசலம் தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, குளம்போல கழிவுநீர் தேங்குவதால், கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 20வது வார்டுக்கு உட்பட்ட புது தெரு என, அழைக்கப்படும், தும்பவனம் அருணாச்சலம் தெருவில், 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ராஜாஜி மார்க்கெட், காந்தி சாலை, ரயில்வே சாலை, ஐதர்பேட்டை, ரெட்டிபேட்டை, பாக்ராபேட்டை, ரங்கசாமிகுளம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழை பெய்யும்போது, பாதாள சாக்கடை மூடி வழியாக வெளியேறும் கழிவுநீர், மழைநீருடன் கலந்து சாலையில் குளம்போல தேங்குகிறது. கழிவுநீர் தேங்குவதால் இப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, தும்பவனம் அருணாச்சலம் தெருவில், பாதாள சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.