sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி மாணவ - மாணவியர் வலியுறுத்தல்

/

சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி மாணவ - மாணவியர் வலியுறுத்தல்

சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி மாணவ - மாணவியர் வலியுறுத்தல்

சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி மாணவ - மாணவியர் வலியுறுத்தல்


ADDED : அக் 15, 2025 11:54 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வையாவூர்: வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி ஏற்படுத்தி தர மாணவ - மாணவியர் வலியுறுத்தி வருகின்றனர்.

வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி வளாகத்தில், மாணவ - மாணவியரின் சைக்கிள் நிறுத்துவதற்கு கூரை வசதி இல்லை. இதனால், மாணவ - மாணவியர், தங்களது சைக்கிளை பள்ளி திறந்தவெளியில் நிறுத்துகின்றனர்.

நாள் முழுதும் வெயிலில் நிற்கும் சைக்கிளில் 'டியூப்கள்' வெடிப்பதாகவும், ஏற்கனவே பஞ்சர் ஒட்டப்பட்ட இடத்தில், காற்று வெளியேறுவதாகவும், 'வால்டியூப்பில்' ஓட்டை ஏற்படுவதாக மாணவ - மாணவியர் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது சைக்கிள் பழுதடைந்து இருப்பதால், மாணவ - மாணவியர் வீட்டிற்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. மழைக்காலத்தில் சைக்கிள் துருப்பிடித்து பழு தடையும் சூழல் உள்ளது.

எனவே, சைக்கிளை பாதுகாக்கும் வகையில், வையாவூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி ஏற்படுத்தி தர மாணவ - மாணவியர் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us