/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேனலுார் சாலை பள்ளங்களில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
/
மேனலுார் சாலை பள்ளங்களில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
மேனலுார் சாலை பள்ளங்களில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
மேனலுார் சாலை பள்ளங்களில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 15, 2025 11:54 PM

உத்திரமேரூர்:மேனலுாரில் சாலை பள்ளங்களில் மழைநீர் குளம்போல தேங்குவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
உத்திரமேரூர் அடுத்த, மேனலுார் கிராமத்தில் அரசாணிமங்கலம், பாரதி நகர், காவனுார் புதுச்சேரி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
சில ஆண்டுகளாக இச்சாலை முறையாக பராமரிப்பு இல்லாமல், ஆங்காங்கே சேதமடைந்து உள்ளன. சேதமடைந்துள்ள இடங்களில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது.
மழை நேரங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டை போல உள்ளது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பள்ளங்களில் சிக்கி, நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, மேனலுாரில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.