/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு
/
காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு
ADDED : ஜன 02, 2026 05:19 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,யாக சஷாங்சாய் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,யாக தேவராணி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சஷாங்சாய் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணியாற்றியுள்ளார். ஒருங்கிணைந்த குற்றவாளிகள் கண்காணிப்பு பிரிவின் எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த இவர், பதவி உயர்வில், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,யாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கலெக்டர் முகாம் அலுவலகம் பின்புறம் உள்ள டி.ஐ.ஜ., அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பணியில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரம் சரகத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்கள் இவரது சரகத்திற்கு கீழ் வரும்.

