/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் சீரமைப்பு பணியில் சேதமாகும் குடிநீர் குழாய்கள்
/
கால்வாய் சீரமைப்பு பணியில் சேதமாகும் குடிநீர் குழாய்கள்
கால்வாய் சீரமைப்பு பணியில் சேதமாகும் குடிநீர் குழாய்கள்
கால்வாய் சீரமைப்பு பணியில் சேதமாகும் குடிநீர் குழாய்கள்
ADDED : ஜன 02, 2026 05:19 AM
வாலாஜாபாத்: பாலுார் ஏரிக்கான பாலாற்று நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு பணியால், குடிநீர் குழாய்கள் உடை படுவதை தவிர்க்க பழைய சீவரம் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் பாலாற்றில் இருந்து பாலுார் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. பருவ மழைக்காலத்தில் இந்த கால்வாய் வாயிலாக செல்லும் தண்ணீர் பாலுார் ஏரி நிரம்ப வழி வகுக்கிறது.
இக்கால்வாய் துார்ந்து செடிகள் வளர்ந்துள்ளதால் துார்வாரி சீரமைக்க நீர்வளத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான பணி கடந்த மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. பாலாறில் இருந்து, பழையசீவரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சென்றடையும் வகையில் இக்கால்வாயை ஒட்டி நிலத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கால்வாய் துார்வார பொக்லைன் இயந்திரம் வாயிலாக பணி மேற்கொள்ளும் போது, நிலத்தடியில் புதைத்துள்ள குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைபட்டு சேதமாகும் நிலை ஏற்படுகிறது.
இதனால், பழையசீவரம் கிராம ஊராட்சியில் குடிநீர் முறையாக வினியோகிப் பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, பழையசீவரத்திற்கான குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படாத வகையில் பாலுார் ஏரிக்கான வரத்து கால்வாய் பணி மேற்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

