ADDED : ஆக 23, 2011 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம் : மரக்கடையில் கிரேன் மூலம் தூக்கப்பட்ட மரம், தொழிலாளி மீது
விழுந்ததில், சம்பவ இடத்திலேயே பலியானார்.சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர்
ரவி கிருஷ்ணா.
இவர் செங்குன்றம் அடுத்த, கிராண்ட் லைன் மாதவரம்
நெடுஞ்சாலையில் மரம் விற்பனை தொழிலகம் நடத்தி வருகிறார். இங்கு மாதவரம்
பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், 44. என்பவர் வேலை செய்து
வந்தார்.நேற்று பகல் 12 மணி அளவில், கிரேன் மூலம் மேலே தூக்கப்பட்ட மரம்
சரிந்து அரிகிருஷ்ணன் மீது விழுந்தது. இதில் அவர் பலத்த காயமைடைந்து சம்பவ
இடத்திலேயே பலியானார். இது குறித்து, செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரிக்கின்றனர்.