/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் வட்டார விவசாயிகள் தரவு சேகரிக்கும் முகாம் துவக்கம்
/
காஞ்சிபுரம் வட்டார விவசாயிகள் தரவு சேகரிக்கும் முகாம் துவக்கம்
காஞ்சிபுரம் வட்டார விவசாயிகள் தரவு சேகரிக்கும் முகாம் துவக்கம்
காஞ்சிபுரம் வட்டார விவசாயிகள் தரவு சேகரிக்கும் முகாம் துவக்கம்
ADDED : பிப் 11, 2025 12:31 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வட்டாரத்தில், வேளாண்மை அடுக்ககம்' என்ற திட்டத்தில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் முகாம் நேற்று முன்தினம் துவங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இம்முகாமில், மின்னணு முறையில், விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு போல, விவசாயிகளுக்கான அடையாள அட்டை எண் வழங்கப்பட உள்ளது.
இனிவரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து திட்ட பலன்களும் இத்திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.
எனவே, காஞ்சிபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும், தங்களது கிராமங்களில் முகாம் நடைபெறும் நாட்களில், நிலம் சம்பந்தமான ஆவணங்களை பட்டா, ஆதார் அட்டையுடன் இணைத்து, மொபைல் எண் மற்றும் பிற ஆவணங்களையும் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில், வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண் அலுவலர்களை அணுகலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்.