/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
84 வழக்குகளில் தொடர்புடைய காஞ்சிபுரம் ரவுடி தியாகு கைது
/
84 வழக்குகளில் தொடர்புடைய காஞ்சிபுரம் ரவுடி தியாகு கைது
84 வழக்குகளில் தொடர்புடைய காஞ்சிபுரம் ரவுடி தியாகு கைது
84 வழக்குகளில் தொடர்புடைய காஞ்சிபுரம் ரவுடி தியாகு கைது
ADDED : ஜூன் 06, 2025 02:03 AM

காஞ்சிபுரம்:கட்டப்பஞ்சாயத்து, கொலை என, காஞ்சிபுரத்தையே மிரட்டி வந்த ரவுடி தியாகு, நாட்டு வெடிகுண்டு வீசி வசூல் ராஜாவை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாமல்லன் நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற வசூல் ராஜா, 38. இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், அடிதடி என, 20க்கும் மேற்பட்ட வழக்குகளோடு, காஞ்சிபுரத்தில் 'ஏ பிளஸ்' பிரிவு ரவுடியாக வலம் வந்தார்.
இந்நிலையில், கடந்த மார்ச்- 11ம் தேதி, பிற்பகல் 12:00 மணி அளவில், காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் இருந்து, திருக்காலிமேடு ரேஷன் கடை அருகே, தனியாக இருந்த வசூல் ராஜா மீது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசினர்.
நிலை தடுமாறி விழுந்த வசூல் ராஜாவின் முகம் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில், ஐந்து பேரும் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில், வசூல் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டிய நபர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
காஞ்சி தாலுகா போலீசார், திருக்காலிமேடு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் படி, 10 பேரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான பொய்யாக்குளம் தியாகு; செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த அசோக், 23, ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
அசோக்கை, கூடுவாஞ்சேரி போலீசார் மற்றொரு வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ரவுடி தியாகு, பெங்களூரில் பதுங்கி இருப்பதாக, காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது.
அதன்படி, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் மற்றும் தனிப்படை போலீசார், பெங்களூரில் தலைமறைவாக இருந்த ரவுடி தியாகுவை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
கட்டப்பஞ்சாயத்து, கொலை உள்ளிட்ட குற்றங்களை செய்து, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களை மிரட்டி வந்த ரவுடி தியாகு மீது, 12 கொலை வழக்கு, 24 கொலை முயற்சி வழக்கு, 48 பிற வழக்குகள் என, மொத்தம் 84 வழக்குகள் நிலுவையில் உள்ளன.