ADDED : டிச 04, 2025 04:21 AM

கா ஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மாருதி நகரில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஊராட்சி துாய்மை ப ணியாளர்கள் பல மாதங்களாக வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்க வருவதில்லை.
இந்நகரில் உள்ள தெருக்களில் குப்பை தொட்டியும் அமைக்கவில்லை. இதனால், இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களது வீட்டு குப்பையை லட்சுமி நாராயண தெருவில் காலியிடத்தில் கொட்டி வருகின்றனர்.
குப்பையில் கொட்டப்படும் கெட்டுப்போன உணவு, இறைச்சி கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மாதக்கணக்கில் தேங்கியுள்ள குப்பையை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது .
எனவே, மாருதி நகரில் குவியலாக உள்ள குப்பையை அகற்றவும், இப்பகுதியில் உள்ள தெருக்களில் குப்பை தொட்டி அமைக்கவும் கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.ராஜேந்திரன், காஞ்சிபுரம்.
சாலையோரம் குப்பை குவியல்
கோனேரிகுப்பத்தில் சுகாதார சீர்கேடு

