ADDED : நவ 12, 2025 10:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரிக்கரை கோவில் அருகில்
வேகத்தடை அமைக்கப்படுமா?
உ த்திரமேரூர் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் ஆற்பாக்கம் வழியாக கல் குவாரிகளுக்கு செல்லும் கனரக லாரிகள் அதிகளவு சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், ஆற்பாக்கம் ஏரிக்கரை அருகில் விநாயகர் கோவில் உள்ளது.
இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையை கடந்து விநாயகர் கோவிலுக்கு சென்று வருகின்றனர். கோவில் அருகில் வேகத்தடை இல்லாததால், சாலையை கடக்கும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், ஆற்பாக்கம் ஏரிக்கரை விநாயகர் கோவில் அருகில், சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.

