/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டையில் 5,000 பனை விதைகள் நடவு
/
வல்லக்கோட்டையில் 5,000 பனை விதைகள் நடவு
ADDED : நவ 12, 2025 10:43 PM
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சொந்தமான, 5 ஏக்கர் இடத்தில், நேற்று முன்தினம், 5,000 பனை விதைகள் நடப்பட்டன.
தமிழகம் முழுதும் உள்ள, ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், அறநிலையத் துறை வாயிலாக பனை விதைகள் நடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஒரகடம் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், கோவிலுக்கு சொந்தமான வல்லக்கோட்டையில் உள்ள 5 ஏக்கர் இடத்தில், பனை விதைகள் நடும் விழா நேற்று முன்தினம் நடந்தது.
விதைகள் தன்னார்வ அமைப்பு மற்றும் வாலாஜாபாத் ஐ.டி.ஐ., மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 5,000 பனை விதைகளை நடவு செய்தனர்.

