ADDED : நவ 18, 2025 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மழைநீர் வடிகால்வாய்க்கு
தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?
கா ஞ்சிபுரம் தாயார் குளம் செல்லும் சாலையில், செல்வஜோதி விநாயகர் கோவில் பின்புறம், மழைநீர் செல்லும் வடிகால்வாய் உள்ளது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம், திருப்பருத்திகுன்றம், கீழ்கதிர்பூர், வந்தவாசி சாலை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர், இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.
வாகன, போக்குவரத்து நிறைந்த, சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை.
இதனால், சாலை வளைவில் திரும்பும்போதும், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாய்க்கு, தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.மோகன், காஞ்சிபுரம்.

