/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த மதகு வழியாக வீணாகும் வேளியூர் ஏரி நீர்
/
சேதமடைந்த மதகு வழியாக வீணாகும் வேளியூர் ஏரி நீர்
சேதமடைந்த மதகு வழியாக வீணாகும் வேளியூர் ஏரி நீர்
சேதமடைந்த மதகு வழியாக வீணாகும் வேளியூர் ஏரி நீர்
ADDED : நவ 18, 2025 04:16 AM

வேளியூர்: வேளியூர் ஏரி உபரி நீர் வெளியேறும் மதகை சீரமைக்காததால், தண்ணீர் வீணாக வெளியேறுவதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த, வேளியூர் கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது.
இந்த ஏரி நீரை பயன்படுத்தி, வேளியூர், சிறுவாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், 750 ஏக்கர் நெல் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த ஏரி கலங்கலில், உபரி நீர் வெளியேறும் வகையில், இரும்பிலான இரண்டு மதகுகள் பொருத்தப்பட்டு உள்ளன.
அந்த மதகு ஒன்றில் அடிபாகம் சேதமடைந்து ஏரி நீர், அதன் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, சேதமடைந்த மதகு வழியாக, ஏரியில் தேங்கியுள்ள தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருப்பதால், நவரை பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நீர்வள ஆதாரத்துறையினர் ஆய்வு செய்து, ஏரி மதகை சரி செய்ய வேண்டும் என, வேளியூர் கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

