/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க கரும்பாக்கம் விவசாயிகள் காத்திருப்பு
/
நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க கரும்பாக்கம் விவசாயிகள் காத்திருப்பு
நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க கரும்பாக்கம் விவசாயிகள் காத்திருப்பு
நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க கரும்பாக்கம் விவசாயிகள் காத்திருப்பு
ADDED : ஜன 26, 2025 07:54 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கரும்பாக்கம் கிராமம். கரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், பாலாற்று பாசனம் மற்றும் ஆழ்துளை கிணற்று பாசனம் வாயிலாக சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களுக்கும் அதிகளவில் நெல் பயிரிடுகின்றனர்.
இப்பகுதிகளில், அறுவடை செய்த நெல்லை, கரும்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையித்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
இங்குள்ள நெல் கொள்முதல் நிலையம் திறந்தவெளியில் இயங்குவதால், அறுவடை காலங்களில், விவசாயிகள் கொண்டு வரும் நெல், போதிய பாதுகாப்பின்றி உள்ளது. ஏப்ரல், மே மாதங்களின் போது கோடை மழை காரணமாகவும், ஜூன், ஜூலை மாதங்களில் வெப்ப சலன மழையாலும், நெல் மூட்டைகள் நனைந்து வீணாகுகின்றன.
இதுகுறித்து கரும்பாக்கம் விவசாயிகள் கூறியதாவது:
அதிக பணம் செலவழித்து, கஷ்டப்பட்டு சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில், விற்பனை செய்ய கொட்டி வைக்கிறோம். அச்சமயம், திடீர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து, நஷ்டத்தை சந்திக்கிறோம்.
எனவே, அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பாக வைத்து விற்பனை செய்ய, இப்பகுதியில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

