/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
/
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
ADDED : நவ 05, 2025 02:21 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், கருங்குட்டை சுடுகாட்டில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் செல்லும் சாலையோரத்தில் கருங்குட்டை சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இறந்தால், அவர்களை புதைத்தும், எரியூட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் அப்பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் இறந்துவிட்டார். அவரின் உடலை எரியூட்ட இரவு 7:00 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கருங்குட்டை சுடுகாட்டிற்கு சென்றனர்.
அப்போது, சுடுகாட்டில் மின்விளக்கு வசதி இல்லாமல் இருந்தது. இதனால், அவர்கள் டார்ச்லைட் கொண்டு வெளிச்சம் ஏற்படுத்தினர்.
பின், உடலை எரியூட்டும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் சுடுகாட்டில் இருள் சுழந்து இருப்பதால், அங்கு வரும் மக்கள் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, உத்திரமேரூர் கருங்குட்டை சுடுகாட்டில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

