/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நத்தப்பேட்டை ரயில் கடவுப்பாதையில் தார் சாலையின்றி வாகன ஓட்டிகள் அவதி

ADDED : நவ 05, 2025 02:19 AM

காஞ்சிபுரம்: சேதமடைந்த நிலையில் உள்ள நத்தப்பேட்டை ரயில் நிலைய கடவுப்பாதைக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அடுத்துள்ள நத்தப்பேட்டை ரயில் கடவுப்பாதை வழியாக, களியனுார், வையாவூர், ஏனாத்துார் முத்தியால்பேட்டை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிக்கு பலர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடவுப்பாதையில் ஏற்கனவே இருந்த பழைய தண்டவாளம் மாற்றப்பட்டு, புதிதாக தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.இப்பணியின்போது, நத்தப்பேட்டை கடவுப்பாதை நடுவே இருந்த தார் சாலை அகற்றப்பட்டது. அதன் பின் புதிய தார் சாலை அமைக்கவில்லை.
இதனால், நத்தப்பேட்டை ரயில் நிலைய கடவுப்பாதை சாலையை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், நத்தப்பேட்டை ரயில் நிலைய கடவுப்பாதைக்கு, தார்ச்சாலை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.