/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கருகிய நெல் பயிரால் கரூர் விவசாயிகள் கவலை
/
கருகிய நெல் பயிரால் கரூர் விவசாயிகள் கவலை
ADDED : அக் 07, 2025 01:53 AM

வாலாஜாபாத், கரூர் கிராமத்தில் மானாவாரி பருவத்திற்கு பயிரிட்ட நெல் பயிர் பாசனம் இல்லாமல் காய்ந்து கருகி உள்ளதால், அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், கரூர் கிராமத்தில் சொர்ணவாரி பருவத்தை தொடர்ந்து, மானாவாரி பருவ சாகுபடிக்கு அப்பகுதி விவசாயிகள் 100 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர்.
வானம் பார்த்த பூமியான இந்த மானாவாரி நிலங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் பயிரிட்ட நெல் பயிர் தற்போது ஒரு அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளன.
இந்நிலையில், இப்பகுதியில் ஒரு மாதமாக சரிவர மழைப்பொழிவு இல்லாததால் பாசனமின்றி அப்பயிர் காய்ந்து கருகி உள்ளன.
இனி பாசனம் கிடைத்தாலும் அப்பயிர் பசுமையடைய வாய்ப்பு இல்லை என கரூர் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கரூர் கிராம விவசாயிகள் கூறியதாவது,
இந்த சீசனில் மானாவாரி பருவத்திற்கு வழக்கமாக நெல் பயிரிடுவது வழக்கம். தென்மேற்கு பருவமழை, அதை தொடர்ந்து வட கிழக்கு பருவ மழையால் பயிர்களுக்கு தேவையான பாசனம் கிடைத்து மகசூல் கி டைக்கும்.
ஆனால், ஒரு மாதமாக கரூ ர் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்யவில்லை. எப்போதாவது பெய்த மழையும் துாரல் மழையாக இருந்ததால் அது பாசனத்திற்கு பயன்பாடாக இல்லை. இதனால், நெல் பயிர் அனைத்தும் காய்ந்து கருகி விட்டன.
இனி கனமழை பெய்தாலும் பயிர் மீண்டும் துளிர்விட வாய்ப்பு இல்லாததால், வேளாண்துறை அதிகாரிகள் இப்பகுதியில் பார்வையிட்டு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோன்று மருதம் கிராமத்திலும் மானாவாரி பருவ சாகுபடிக்கு பயிரிட்ட நெல் பயிர் பாசனம் இல்லாமல் காய்ந்து கருகி இருப்பது குறிப்பி டத்தக்கது.