/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 15 ஆண்டுகளுக்கு பின் குடிநீர் கேன் ஒன்றுக்கு ரூ.5 உயர்வு
/
காஞ்சியில் 15 ஆண்டுகளுக்கு பின் குடிநீர் கேன் ஒன்றுக்கு ரூ.5 உயர்வு
காஞ்சியில் 15 ஆண்டுகளுக்கு பின் குடிநீர் கேன் ஒன்றுக்கு ரூ.5 உயர்வு
காஞ்சியில் 15 ஆண்டுகளுக்கு பின் குடிநீர் கேன் ஒன்றுக்கு ரூ.5 உயர்வு
ADDED : அக் 07, 2025 01:54 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன் குடிநீர் 20 ரூபாய்க்கு விற்க ப்பட்டு வந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்குப்பின், 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால், தற்போது 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
காஞ்சிபுரம் வட்டாரத்தில் 17 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். வீடு, அலுவலகம், தொழிற்சாலைகளில் பெரும்பாலும் குடிப்பதற்காக கேன் குடிநீரை பயன்படுத்துவதால், நாளுக்கு நாள் கேன் குடிநீரின் தேவை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கேன் குடிநீர் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 1ம் தேதி முதல் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், தற்போது 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இ தில், வீடுகள், அலுவலகங்களுக்கு குடிநீர் கேன் டெலிவரி செய்வோர் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாவது தளத்திற்கு ஏற்பட 25 முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க துணை செயலர் லோகேஷ் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுகளாக கேன் குடிநீர் வினியோகஸ்தர்கள், ஒரு கேன் குடிநீரை 20 ரூபாய் முதல், விற்பனை செய்து வந்தனர்.
தற்போது, மின் கட்டணம், பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட் கள் விலை உயர்வு, பணியாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், 15 ஆண்டுகளுக்கு பின் 5 ரூபாய் விலையை உயர்த்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.