/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் நாளை ருத்ரபசுபதி நாயனார் குரு பூஜை
/
காஞ்சியில் நாளை ருத்ரபசுபதி நாயனார் குரு பூஜை
ADDED : அக் 07, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,ருத்ரபசுபதி நாயனார் குரு பூஜை நாளை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை சாலியர் தெரு தெற்கு வீதியில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் குலாலர் மரபினர் தர்மபரிபாலனம் இணைந்து, புரட்டாசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில், ருத்ரபசுபதி நாயனார் குரு பூஜை நாளை நடத்த உள்ளனர்.
இங்குள்ள, கேதார கவுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ருத்விஜர்களால் 11 முறை ஜபம் நடைபெற உள்ளது.