/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாம்புதுாரில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளுக்கு மரக்கம்பால் முட்டு

ADDED : அக் 07, 2025 01:55 AM

உத்திரமேரூர், மாம்புதுாரில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளுக்கு மரக்கம்பால் அப்பகுதி மக்கள் முட்டு கொடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், சின்னாளம்பாடி ஊராட்சியில் உள்ள மாம்புதுார் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள விவசாய நிலங்களில் மின்வாரியத் துறையின் சார்பில், மின் கம்பங்கள் நடப்பட்டு மின் கம்பிகள் மூலமாக, மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் நடப்பட்டுள்ள, இரு மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் தளர்ந்து தாழ்வாக செல்கின்றன.
இதனால், விவசாய நிலங்களில் நடவு மற்றும் அறுவடை பணிகள் செய்யும்போது இடையூறு ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க, அப்பகுதி மக்கள் தாழ்வாக உள்ள மின் கம்பிகளுக்கு மரக்கம்பால் முட்டு கொடுத்துள்ளனர்.
காற்று பலமாக வீசும் நேரங்களில் மரக்கம்பு நழுவி, மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மாம்புதுாரில் மரக்கம்பால் முட்டு கொடுத்துள்ள மின் கம்பிகளை இழுத்துகட்டி சீரமைக்க, மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.