/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கண்காணிப்பு கேமரா பழுது குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல்
/
கண்காணிப்பு கேமரா பழுது குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல்
கண்காணிப்பு கேமரா பழுது குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல்
கண்காணிப்பு கேமரா பழுது குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல்
ADDED : அக் 07, 2025 01:56 AM

ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் வேளாங்கண்ணி நகரில், கேபிள்கள் அறுந்து பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராவால், குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏறபட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சந்தவேலுார் ஊராட்சிக்குட்பட்ட சுங்குவார்சத்திரம் வேளாங்கண்ணி நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
அதேபோல, சுங்குவார்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் வாடகைக்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
பெண் ஊழியர்கள் அதிகம் தங்கியுள்ள இப்பகுதியில், இரவு நேரத்தில் வேலைக்கு செல்லும், பணி முடிந்து இரவு அறைக்கு வரவும் என, 24 மணி நேரமும் பெணகள் செ ன்று வருகின்றனர்.
இதனால், அப் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குற்றவாளிகளை கண்டறிய வேளாங்கண்ணி நகர் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், அவ்வழியாக வந்த வாகனம் மோதியதில், கண்காணிப்பு கேமரா கம்பம் சேதமடைந்து, கேபிள்கள் துண்டானது. இதனால், சில மாதங்களாக கண்காணிப்பு கேமரா செயல்படாமல் உள்ளது.
இதனால், அப்பகுதியில் குற்றவாளிகளைஈடுபடுபவர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தவி ர, இரவு நேரத்தில் பணிக்கு செல்லும் பெண்கள், பாதுகாப்பு இல்லாத சாலையில் செல்லும் போது, அச்சத்தில் செ ன்று வருகின்றனர்.
எனவே, வேளாங்கண்ணி நகரில் சேதமடைந்துள்ள கண்காணிப்பு கேமராவை, சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.