/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காற்றாடி திருவிழா ரூ.1.60 லட்சம் வருவாய்
/
காற்றாடி திருவிழா ரூ.1.60 லட்சம் வருவாய்
ADDED : ஆக 20, 2025 11:24 AM
மாமல்லபுரம்: நித்ய கல்யாண பெருமாள் கோவில் இடத்தை, சர்வதேச காற்றாடி திருவிழாவிற்கு பயன்படுத்தியதற்காக, வாடகை தொகையாக, 1.60 லட்சம் ரூபாய் கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, கடந்த ஆக., 14ம் தேதி முதல், 17ம் தேதி வரை, சர்வதேச காற்றாடி திரு விழாவை, மாமல்லபுரம் அடுத்த, திரு விடந்தை கடற்கரை பகுதியில் நடத்தியது.
இந்தியா, மலேஷியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த காற்றாடி கலைஞர்கள், 250க்கும் மேற்பட்ட காற்றாடிகள் பறக்கவிட்டனர்.
இசைநிகழ்ச்சி, வீட்டு உபயோக பொருட்கள், உணவு, தின்பண்டங்கள் உள்ளிட்ட விற்பனை அரங்கங்கள் இடம்பெற்றன.
இவ்விழா நடத்துவதற்காக, திருவிடந்தையில், ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலின் இடம் பயன்படுத்தப் பட்டது.
அதற்கான வாடகை யாக, 1.60 லட்சம் ரூபாயை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செலுத்தியதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

