/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமையல் கூடத்தின் கழிவுநீரால் மாசடையும் காட்டரம்பாக்கம் ஏரி
/
சமையல் கூடத்தின் கழிவுநீரால் மாசடையும் காட்டரம்பாக்கம் ஏரி
சமையல் கூடத்தின் கழிவுநீரால் மாசடையும் காட்டரம்பாக்கம் ஏரி
சமையல் கூடத்தின் கழிவுநீரால் மாசடையும் காட்டரம்பாக்கம் ஏரி
ADDED : ஜன 18, 2024 11:03 PM

இருங்காட்டுக்கோட்டை:காட்டரம்பாக்கம் பகுதியில் இயங்கும் தனியார் சமையல் கூடத்தின் கழிவுநீர் அருகே உள்ள ஏரியில் வெளியேற்றப்படுவதால் ஏரி நீர் மாசடைந்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், காட்டரம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் காட்டரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி அங்கு 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது.
இருங்காட்டுக்கோட்டையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் இந்த ஏரி நீரில் குளிக்கின்றனர். இந்நிலையில், காட்டரம்பாக்கத்தில் இயங்கும் தனியார் சமையல் கூடத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஏரி நீரில் கலப்பதால் மாசு ஏற்படுகிறது.
இதுகுறித்து காட்டரம்பாக்கம் மக்கள் கூறியதாவது:
தொழிற்சாலைகளுக்கு உணவு தயாரிக்கும் தனியாருக்கு சொந்தமான உணவு தயாரிக்கும் கூடம் காட்டரம்பாக்கத்தில் இயங்குகிறது.
இங்கு நாளொன்றுக்கு 4,000க்கும் மேற்பட்டோருக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. இங்கு உணவு தயாரிக்கும் போது வீணாகும் கழிவுகள் ஏரியின் நீர்வரத்து கால்வாயில் வெளியேற்றப்படுகிறது.
இதனால் இந்த கால்வாய் முழுதும் உணவு கழிவுகள் தேங்கி அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கழிவுகள் ஏரியில் எளிதாக கலப்பதால் ஏரி நீர் மாசடைந்துள்ளது.
இதனால், ஏரியில் குளிப்பவர்களுக்கும், ஏரி நீரை பயன்படுத்தி விவசாய நிலத்தில் உழவு பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் உடல் அரிப்பு ஏற்படுகிறது. பொதுப்பணித் துறை, சுகாதார துறையினருக்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

