/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த காட்டாங்குளம் சாலை
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த காட்டாங்குளம் சாலை
ADDED : மார் 30, 2025 02:10 AM

உத்திரமேரூர்:நெல்வாய் -- மதூர் சாலையில் இருந்து பிரிந்து, காட்டாங்குளம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை இரண்டு கிலோ மீட்டர் தூரம் உடையது.
இச்சாலையை பயன்படுத்தி, அப்பகுதியினர் மதுராந்தகம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
தற்போது, இச்சாலை முறையான பராமரிப்பு இல்லாமலும், ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்தும் உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பெயர்ந்துள்ள ஜல்லி கற்களில் சிக்கி, அடிக்கடி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, வாகன ஓட்டிகள், துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.